பீன்ஸ் பட்டாணி குருமா செய்வது எப்படி?


தேவையான பொருட்கள் :


பொருள் - அளவு

பீன்ஸ் கால் கிலோ

பட்டாணி 100 கிராம் 

பொpய வெங்காயம் 1 

தக்காளி 2 

பட்டை 2

கிராம்பு 4

துருவிய தேங்காய்அரை கப் 

சோம்பு 2 டீஸ்பூன் 

பச்சை மிளகாய் 2

மல்லித் தூள் 1 டேபிள் ஸ்பூன் 

மிளகாய்த் தூள் 1 டேபிள் ஸ்பூன் 

எண்ணெய்தேவைக்கேற்ப

உப்பு தேவைக்கேற்ப

கொத்தமல்லி தழை1 கைப்பிடி அளவு 

செய்முறை :


  முதலில் பட்டாணியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, நன்கு வேகவைக்க வேண்டும். 


  மிக்ஸியில் 1 பட்டை, 2 கிராம்பு, பச்சை மிளகாய், சோம்பு, துருவிய தேங்காய் போட்டு நன்கு நைஸாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 


  பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீதமுள்ள பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். 


  இதனுடன் தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.


  பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, மல்லித் தூள், மிளகாய்த் தூள் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். 


  பின் வேகவைத்துள்ள பீன்ஸ், பட்டாணி சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பீன்ஸ் குருமா ரெடி!


இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சப்பாத்தி மற்றும் தோசைக்கு வைத்து சாப்பிடலாம்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.