பீட்ரூட் சூப் செய்வது எப்படி ...!


 தேவையான பொருட்கள் :


பொருள் - அளவு

கேரட் 100 கிராம் 

பீட்ரூட் 100 கிராம்

பாசிப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி சாஸ் 2 டீஸ்பூன் 

மிளகுத் தூள் 1 டீஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :


  முதலில் பீட்ரூட், கேரட் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 


  ஒரு கிண்ணத்தில் பீட்ரூட், கேரட் மற்றும் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.


  வேக வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து, 3 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


  கலவை கொதித்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 


  தக்காளி சாஸ், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். சுவையான, சத்தான பீட்ரூட் சூப் தயார். 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.