ஐஸ்வர்யம் பன்முக சிந்தனைகள்.!

 


ஐஸ்வர்யம என்றால்

பணக்கட்டுகளோ

தங்க நகைகளோ 

மட்டும் அல்ல...


ஐஸ்வர்யம் பன்முக சிந்தனைகள்.


வீட்டு வாசலில், பெண்பிள்ளையின் 

கொலுசு ஒலி ஐஸ்வர்யம்!


வீட்டிற்கு வந்தவுடன், புன்னகையோடு வரவேற்கும் மனைவி ஐஸ்வர்யம்!


எவ்வளவு வளர்ந்தாலும், அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம்!


அம்மா கையால் உணவு ஐஸ்வர்யம்!


பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் ஐஸ்வர்யம்!


இளஞ்சூடு சூரியன் ஐஸ்வர்யம்!


பவுர்ணமி தினத்தில் சந்திரன் ஐஸ்வர்யம்!


உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும்  இந்த பஞ்ச பூதங்கள் ஐஸ்வர்யம்!


பால் வடியும் குழந்தையின் சிரிப்பு ஐஸ்வர்யம்!


இயற்கை அழகு ஐஸ்வர்யம்!


உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு ஐஸ்வர்யம்!


அவசரத்தில் உதவும் நண்பன் ஐஸ்வர்யம்!


புத்தியுள்ள குழந்தைகள் ஐஸ்வர்யம்!


குழந்தைகள் படிக்கும் படிப்பு ஐஸ்வர்யம்!


தெய்வம் கொடுத்த உடல் ஆரோக்கியம் ஐஸ்வர்யம்!


ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு ஐஸ்வர்யம்!


ஐஸ்வர்யம் என்றால் கையில் எண்ணும் பணக்கட்டு அல்ல !

கண்ணால் பார்க்கும் உலகம் ஐஸ்வர்யம்!

மனசு அடையும் சந்தோஷம் ஐஸ்வர்யம்..!

நம்மை நல்வழி படுத்தும் குருவின்

அறிவுரைகள் ஐஸ்வர்யம்

நம்மை சுற்றி நல்ல நண்பர்கள் உறவுகள் இருந்தால் ஐஸ்வர்யம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.