நோர்வே அருள்மிகு முருகன் கோயில், 26 ஆம் ஆண்டு - மாபெரும் திருவிழா!


பகைக்கேடு ஆண்டு - 2024


முருகன் அடியார்களே!


குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற கூற்றுக்கமைய -மலையும் மலைசார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தில், வெண்பனிப் பூக்களால் தன் உடலை மறைத்து எழில் காட்டும் நோர்வே நாட்டின் தலைநகர் ஒசுலோவின் அழகே உருவான தெய்விய நீர்ச் சிறப்புடைய றொம்மன் பகுதியில் எழுந்தருளி, வேண்டுவார் வேண்டும் அருள் பொழியும் வள்ளி, தெய்வானையுடன் இணையாக இருக்கும் குறிஞ்சிக்கடவுளின் கோயில் ஆண்டுத் திருவிழாவானது நிகழும் பகைக்கேடு ஆண்டு கடகத்திங்கள் 9 ஆம் நாள் (24.07.2024) அறிவன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 11 நாள்கள் காலை, மாலைத்திருவிழாவுடன் நடைபெறுவதோடு -12 ஆம் நாள் பூஞ்ச்சோலை திருவிழாவும், 13 ஆம் நாள் வைரவர் மடையும் நிகழ்வும் வண்ணம் குகனருள் கைகூடி வேண்டுதல் பெற்றுள்ளமையினால் இவ் நல்வினை நாள்களில் அடியார்கள் அனைவரும் நல்லொழுக்க பண்பாளர்களாய் கோயில் வழிபாடு செய்து இறையருள் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். 


23.07.2024 - கடகத்திங்கள் 8 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 4:00 மணி கணபதி ஓமம் அமைதிச்சடங்குகள். மாலை 7:00 மணிக்கு சிறப்புப் பூசை நடைபெற்று, கரிமுகப்பெருமானின் உள்வீதியுலாவும் இடம்பெறும்.

***

24.07.2024 - கடகத்திங்கள் கொடியேற்றம் மற்றும் 1 ஆம் திருவிழா!. 9 ஆம் நாள் அறிவன்கிழமை காலை 06:30 மணி திருமுழுக்கு பூசை, 08:30 மணிக்கு சிறப்புப் பூசை! தொடர்ந்து மாறாத உறுதியோடு, 10:00 மணிக்கு வேனில் (வசந்த) மண்டக பூசை. இங்கே நண்பகல் 12:00 மணிக்கு இடம்பெறும் கொடியேற்றத்தைத் தொடர்ந்து திருவருள் அமுது வழங்கப்படும். 

***

2,3,4,5,6,7,8,9 ஆம் பகல்த் திருவிழா விவரம்:


07:00 மணி - மன்திறபூர்வ திருமுழுக்கு!

09:00 மணி - வேள்வி, சிறப்பு வழிபாடு!

10:00 மணி - கொடிக்கம்ப வழிபாடு!

11:00 மணி - பூஞ்சோலை கூட வழிபாடு

12:00 மணி - உள்வீதி சுற்றுதல்! 

13:00 மணி - இறையருள் அமுது வழங்கல்!

***

1, 2, 3, 4, 5, 6 ஆம் மாலைத் திருவிழா விவரம்:


16:00 மணி - வேள்வி வழிபாடு, சிறப்புப்பூசை!

16:45 மணி - கொடிக்கம்ப பூசை!

17:30 மணி - பூஞ்சோலை கூடப்பூசை!

19:00 மணி - வெளி வீதியுலா!

20:15 மணி - சமய சொற்பொழிவு!

20:15 மணி - இறையருள் அமுது வழங்கல்! 

***

29.07.2024 - திங்கட்கிழமை பகல் பத்திமுத்தி வீடுபேறு(மோட்ச) ஊர்வலமும், தொடர்ந்து நண்பகல் பூசை நிறைவுற்றபின் மாவிளக்கு பூசையும் இடம்பெறும். மாலை நளி(கார்த்திகை) நோன்புப்பூசை நிறைவுற்றபின் மாவிளக்கு பூசையும் இடம்பெறும்! 


செய்தி வெளியீடு: 22. யூலை 2024!.  


தொகுப்பு: கதிர், நோர்வே தமிழ்முற்றம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.