வலிசுமந்த எழுத்தாளன் விழிமூடிப்போனான்!!

 




போரினுள் வாழ்ந்து அந்தப் போரிலேயே வடுத்தாங்கி எதிர்கால வாழ்வியலை புடம்போட்டு 

ஒரு கால் இழந்து,ஒரு கை இழந்து நின்றபோதும் வலியை ஊன்றுகோலாய்ப் பற்றி நிமிர்ந்தெழுந்த போரின் சாட்சி சொல்லும் எழுதுகோலொன்று 

தன் எழுதுதிறனை முற்றாக நிறுத்தி 

எம்மை எல்லாம் விழிநீர் காணிக்கை 

எழுத வழிசெய்து போனான். 


தாயகத்தின் ஆர்ப்பாட்டமில்லாத ஓர் எழுத்தாளன், கவிஞர், நாவலாசிரியர், பேச்சாளன், தன்னார்வமிக்க முதலாளி, பண்பான மனிதநேயம் மிக்கவன், பல்துறை ஆற்றலோன், பிறர்க்கெல்லாம் முன்னுதாரணமாய் வாழ்ந்த 

மன்னார், மாந்தை மேற்கு, அடம்பனில் வசித்துவந்த திரு திருமதி கோபாலகிருஷ்ணன் புனிதவதி தம்பதிகளின் பிள்ளை பிரேம்குமார் 

(கம்பிகளின் மொழி பிரேம்)

1982.12.29 பிறந்து 2024.07.05 அன்று அகாலமரணமடைந்தார். 

இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் இவர் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கான அதீத பங்கை நிலைநாட்டிய போராளி…..



இலக்கிய உலகிற்கு வலிபேசும் மொழியாக முதலாவது கவிதைத் தொகுதியை

 “கம்பிகளின் மொழி பிரேம்” எனும் தலைப்பிலும், நூலாசிரியராக அதன் அடைமொழியுடன் அறியப்பட்ட பிரேம் அவர்கள் 

தனது இரண்டாவது படைப்பாக

“காய்ந்து போகாத இரத்தக் கறைகள்” எனும் குறுநாவலையும் தந்திருந்தார். 

அந்த நாவலின் விழிப்பாக!!! 


“காயங்கள் ஆறவில்லை இரத்தம் இன்னும் கசிகிறதே…..”


அந்தக் குறுநாவலின் சமர்ப்பணமாக…


சாவுக்கு நாள்குறித்தி

சாதனைக்கு வழிகாட்டி

சமாதியாகிப்போன

சாதனையாளர்களுக்கு

இன்நூல் சமர்ப்பணம்.


எனப்பதிந்த வலிமிகுந்த படைப்பாளர் தனது மூன்றாவது நூலாக….

“மறந்திடுமோ மனதை விட்டு” 

எனும் கவிதைத் தொகுதியையும் இலக்கியப் பரப்பிற்கு தந்துள்ளார். 

இந்நூலின் சமர்ப்பணமாக…


எம்வாழ்வை செப்பனிட 

தம்வாழ்வை மாய்த்துக்கொண்ட 

இனிய நண்பர்களுக்க இந்நூல் சமர்ப்பணம்.


என்றுள்ளது.  


தொடர்ந்து இந்நூலின் இறுதிப் பக்கத்தில் கம்பிகளின் மொழி பிரேம் அவர்கள்

தன் நிழற்படத்தோடு 

“தங்களின் ஆசிகளுடன்  என் பயணம் தொடரும்…. 

எனக் குறிப்பிட்டிருந்தார். 


இவரது நான்காவது தத்துவ நூலாக

“பொன்னான பரிசு” 

எனும் நூலையும் இலக்கியப் பரப்பிற்கு தந்துள்ளாள்.


கம்பிகளின் மொழி பிரேம் அவர்கள்  

பல பத்திரிகைகள் உட்பட தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்களூடாக பல்வேறு கட்டுரைகள், இலக்கியப் படைப்புகள், அறிமுகங்கள் எனப் பல்வகையான படைப்புகளை வெளியிட்டு வந்தவர். 

பல இளைய படைப்பாளர்களை அரவணைத்துப் பயணிக்கும் ஒரு பக்குவம்மிக்க ஆவண எழுத்தாளன். 

தடம் மாறாத தமிழின தேசிய பற்றுறுதிகொண்ட பன்முக ஆழுமையாளனை

ஏனோ… எதற்கோ… 

இழந்திருக்கிறது ஈழ இலக்கிய சமூகம்…..


ஈழ வரலாறு சொல்லும் தொகுப்பாக வெளிவர இருந்த


“குமரிக்கண்டம் முதல் முள்ளிவாய்க்கால் வரை……”


நூல் ஆக்க ஏற்பாடுகள் அப்படியே இருக்க திடீரென கயவர்களால் உயிர்காவு கொள்ளப்பட்டான் வலிநிறைந்த எழுத்தாளன் பிரேம்…..


நூலாசிரியர் பிறரம் அவர்கள் தனது 

மூன்று நூல்களையும் எனக்கு தபாலிட்டிருந்தார். 

அந்த மூன்றுநூல்கள் பற்றிய பார்வைகளையும், 

அவரது உள்ளத்து உணர்வுகளையும் முகநூல் சொந்தங்களோடு காலக் கிரமத்தில் 

பகிர்ந்து நிற்போம்.


பேராழுமை கொண்ட பல்துறைப்படைப்பாளனுக்கு எமது இதயபூர்வ இறுதி வணக்கங்களை

தெரிவித்துக் கொள்வோமாக.


      து.திலக்(கிரி),

       சுவிட்சர்லாந்து,

      06.07.2024,

      13:05.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.