இளைஞன் மீது வாள்வெட்டு!!
யாழ். மருதனார்மட பகுதியில் இளைஞன் ஒருவரை மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதான 4 இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (26-07-2024) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மருதனார்மடம் சந்தியில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை தனது வியாபார நடவடிக்கையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, வன்முறை கும்பல் ஒன்று அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பியோடியுள்ளனர்.
கருத்துகள் இல்லை