இலங்கை மகளிர் அணி சாதனை!
2024 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.
ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இன்றையதினம் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் ஹர்ஷித சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் சாமரி அத்தபத்து 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
கருத்துகள் இல்லை