குளவியால் பாடசாலைக்குப் பூட்டு!!
குளவிக் கூடு கலைந்து பாடசாலை மாணவர்கள் உட்பட பலரை கொட்டியதால் மடிதியாவல ஆரம்பப் பாடசாலை மூடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (23-07-2024) இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்கு அருகில் இருந்த காணியில் மரமொன்றில் காணப்பட்ட குளவி கூட்டை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளை அந்த குளவிக் கூட்டை பருந்துகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருந்துகளின் தாக்குதலுக்குப் பின்னர் குளவிகள் கலைந்து பாடசாலை மாணவர்கள் உட்பட பலரை கொட்டிய நிலையில் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை