இனியும் ஒரு அரசியல்வாதி இவ்வாறான தவறை செய்யக்கூடாது!

 


ஆயுத வழிமுறை தழுவாத தமிழீழ விடுதலை நோக்கிய அரசியல் போராட்டப் பரப்பில் அமரர் சம்பந்தன் அவர்களுக் இறுதி வணக்கம் செய்ய வேண்டும் என்றால்! அதுவே விடுதலைப் போராட்டப் பரப்பில் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றால்...!


சரி, பிழை, துரோகங்களை கடந்து விரும்பியோ, விரும்பாமலோ தவிர்க்க முடியாத வகையில் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அமரர் சம்பந்தன் அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் தமிழீழ தேசத்தின் மீது அளவில்லாத பற்றும், காதலும்கோண்ட, அதற்காக உழைக்கும் அனைவரின் துயரிலும் நானும் பங்கு கொள்கின்றேன்.


அமரர் சம்பந்தன் அவர்கள் ஆரம்ப காலங்களில் தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் ஆற்றிய நற் பங்களிப்புகளை மட்டுமே இந்நேரத்தில் நினைவில் நிறுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நலன் கருதி காலத்திற்குக் காலம் துரோகிகளுக்கும் மன்னிப்பு வழங்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழியில் இன்றைய விடுதலைப் போராட்டத்தின் ஒன்றுபட்ட தமிழின எழுச்சிசியை கருத்தில் கொண்டு என்றுமே விட்டு அகலாத தமிழீழக் கனவை உயிர் மூச்சில் சுமந்த மாவீரர்களின் வழியில் அவர்களின் புனிதத்தை என்னால் எட்ட முடியாவிடினும் அவர்கள் உயிரிலும் மேலாக நேசித்த தமிழீழக் கனவை வென்றெடுக்க விரும்பும் ஒருவனாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அர்ப்பணிப்பு மிக்க அற்புத தியாகங்களை பல இடங்களில் கொச்சைப்படுத்திய அந்த உயரிய விடுதலைப் போராட்டத்தை பல இடங்களில் முனை மழுங்கச் செய்த அமரர் சம்பந்தன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒற்றுமையின் தேவை கருதி துரோகிகளுக்கும் மன்னிப்பு வழங்கும் ஒருவனாக எனது இறுதி வணக்கத்தை செலுத்தி நிற்கின்றேன்.


இந்த இறுதி வணக்கம் அமரர் சம்பந்தன் அவர்களின் கட்சியில் அவரை தலைவராக வைத்தவர்களுக்கும், சுயநலன் இன்றி அவரைத் தலைவராக வைத்திருக்க விரும்பியவர்களுக்கும், அவரது தொண்டர்களுக்கும், நெருங்கிய ஆதரவாளர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் மனவருத்தம் தரலாம். எனினும் வரலாற்றில் இனியும் ஒரு அரசியல்வாதி இவ்வாறான தவறை செய்யக்கூடாது என்பதற்கான கடைசி அரசியல் தலைவராக அமரர் சம்பந்தன் அவர்கள் இருக்கட்டும். அவர் செய்த நற்கருமங்கள் இருப்பின் அவை அவரை ஆத்மா சந்தியடையச் செய்யட்டும்.


இன்றைய இந்த நாளில் அறியாமையினாலோ, சந்தர்ப்பம் சூழ்நிலைகளினாலோ அல்லது சுயநலன்களினாலோ துரோகிகளாக மாறியவர்கள் உங்கள் துரோகச் செயல்கள் இனிமேலும் தொடராமல் நிறுத்தி அனைத்து துரோகச் செயல்களையும் கழுவித் துடைத்தெறிந்து புதிய மனிதர்களாக உண்மையான உளத் தூய்மையுடன் தமிழழீழ விடுதலைக்கு செயலாற்ற வருமாறு தமிழரசுக் கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரையும் வேண்டி நிற்கின்றேன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.