தந்தை ஒருவரின் மோசமான செயல்!!
தனது 18 வயது மகளின் அந்தரங்க வீடியோக்களை தந்தையே சமூக வலைதளங்களில் பரப்பிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இந்தியாவில் கர்நாடக்கா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
தந்தையின் இந்த செயலை அறிந்து மகள் ஒருவகையான விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெண்ணின் தாய் தனது கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
அவரது முறைப்பாட்டில், உறவினரின் பையனை மகள் காதலித்து வந்தது தனது கணவனுக்கு பிடிக்கவில்லை. எனவே அந்த பையனை வீட்டுக்கு அழைத்து வந்து அடித்து துன்புறுத்தி, அவனின் தொலைபேசியில் உள்ள மகளின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைதளங்களில் தனது கணவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் தன்னையும் தனது மகளையும் தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதால் இருவருக்குமே காயங்கள் ஏற்பட்டுள்ளது.
தனது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மனமுடைந்த மகள் நேற்று பினாயில் குடித்து தற்கொலை செய்ய முயன்றாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின்படி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை