சர்வதேசத்திடம் வாங்கிய கடன் ஊழலுக்காகவே!!

 


இலங்கை சர்வதேசத்திடம் வாங்கிய கடன் ஊழலுக்காகவே பயன்படுத்தப்பட்டது.. சட்டத்தரணி சுவஸ்திகா. 


ஐஎவ்எவ் மற்றும் சர்வதேச நாடுகளிடம் வாங்கிய கடன் நாட்டில் ஊழலுக்காக பயன்படுத்தப்பட்ட நிலையில் வாங்கிய கடனின் வட்டியை நாட்டு மக்கள் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தொழிற்சங்க வாதியும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்தார்.


நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் யாழ் கிளை அங்குராப்பணம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


அவர் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தது வீதியாக அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை தென்னிலங்கையில் வலுப்பெற்ற நிலையில் வடக்கில் உள்ளவர்களும் தம்மை இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்த நிலையில் தொழில் சங்கம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தோம்.


வடக்கில் தொழிற்சங்கங்கள் குறைவாக உள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் வெளிவருவது  குறைவாக உள்ளது.


அதன் காரணமாக ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பின் தொழிற்சங்க கிளை ஒன்றினை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தோம் என்றார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் ஐஎம்எவ் பின் நிபந்தனைக்கு ஏற்ற வகையில் இலங்கையில் தொழிலாளர் சட்டங்களை திருத்தம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 


இந்நிலையில் திருத்தப்பட்ட தொழிலாளர் சட்ட வரைபுகள் சிங்களத்தில் மட்டும் உள்ள நிலையில் அதனை ஏனையவர்கள் விளங்கிக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.


இவ் வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாடு புதிய பாதையில் பயணிப்பதாக தெரிவித்திருந்தார். 


அதற்காக வாங்கிய கடன்களை நீடித்து வழங்குவதற்கான கால எல்லைகளையும் நீடித்து நாடு பொருளாதார வளர்ச்சியில் செல்வதாக குறிப்பிட்டு இருந்தார். 


கடன்களை செலுத்துவதற்கான கால நீடிப்பை வழங்கி நாட்டு மக்கள் மீது வரிகளை விதித்து வெளிநாட்டு கடன் சுமையை ஒவ்வொரு குடிமகன் மீதும் திணித்துள்ளார்.


நாட்டை அபிவிருத்தி செய்கிறோம் என ஐஎம்எவ்  மற்றும் சர்வதேச நாடுகளிடம் வாங்கிய கடன்கள் ஊழலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.


 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக சிலரின் அறிவுப்புக்கள்  வெளியாகி உள்ள நிலையில் எனது தனிப்பட்ட கருத்தின் பிரகாரம்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போது வெளியாகிய வேட்பாளர்கள்  எவருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை.


ஆகவே நாட்டுக்கு வழங்கப்பட்ட கடன் தொகைகளை அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் செய்துவிட்டு நாட்டு முன்னோக்கி செல்கிறது எனக் கூறுவது  வேடிக்கையான விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.