இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

 


இஸ்ரேல் நாட்டின் வடபகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இஸ்ரேலிற்கான  இலங்கை தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் அதிகரிப்பது வருவதால் இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் விவசாயம் மற்றும் பராமரிப்பு துறைகளில் சுமார் 2 ஆயிரம் இலங்கையர்கள் வேலை செய்து வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.


சிரேஷ்ட ஹிஸ்புல்லாஹ் இராணுவ அதிகாரி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களால் 15,000 ஏக்கர் உலர் புல்வெளிகளும் விளைநிலங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலில் நிலவும் கடும் வறட்சி காரணமாக பல பகுதிகளுக்கு தீ பரவியுள்ளதாகவும், நிலைமையை கட்டுப்படுத்த அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இஸ்ரேலுக்கான  இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.


இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் வசிப்பவர்கள் தமது பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அத்தியாவசிய விடயங்களுக்கு அன்றி பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.