தேன் சொட்ட சொட்ட சுவையான வட்டலப்பத்தை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
முட்டை - 10
சர்க்கரை - 2 கப்
தேங்காய் - 1
ஏலக்காய் - 3
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
உப்பு - 1 சிட்டிகை
#செய்முறை
1-முதலில் முட்டையை நுரைபொங்கும் அளவுக்கு நன்றாக அடித்து கலக்கி வடிகட்டுங்கள்.
2-சர்க்கரையை மிக்சியில் போட்டு நன்கு பொடியாக்கிய பின்பு தேங்காயை பிழிந்தெடுத்து வடிகட்டி முதல் பாலை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
3-தேங்காய் பாலில் சர்க்கரையையும் அடித்து வைத்த முட்டையையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
4-முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும்.
5-ஏலக்காயை வாணலியில் வறுத்துக்பொடித்து முட்டை கலவையில் 1 சிட்டிகை உப்புடன் சேர்த்து கலக்கவும்.
6-ஒரு பாத்திரத்தில் சிறிது நெய், தடவி அதில் இந்த கலவையை ஊற்றி மூடி வைக்கவும்.
7-ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முட்டை கலவை இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி மிதமான தீயில் வேக வைக்கவும்.
8-கலவை வேக ஆரம்பித்தவுடன் மீதமுள்ள நறுக்கிய முந்தி பருப்பை மேலே தூவி மூடியை கொண்டு மூடி விடவும்.
9-வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு ஒரு சுத்தமான குச்சியை கலவைக்குள் விட்டு பார்க்கவும். கலவை வெந்து இருந்தால் குச்சியில் ஒட்டாது. பின்பு அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
இப்போ வட்டிலாப்பம் ரெடியாகிட்டு அதனை கூல் செய்து துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.
#kulfi #KulfiPot #Wattilapam #Wattilapan #வட்டிலாபம் #chillcafeakp #பாணிப்பூரி #ஜஸ்கிரீம்
கருத்துகள் இல்லை