வெண்டைக்காய் காரக் குழம்பு செய்வது எப்படி..!


தேவையான பொருட்கள் :


பொருள் - அளவு

வெண்டைக்காய்கால் கிலோ 

சின்ன வெங்காயம்10

பச்சை மிளகாய்3

தக்காளி 2

மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

மிளகாய் தூள்அரை டேபிள் ஸ்பூன் 

தனியா தூள் அரை டேபிள் ஸ்பூன் 

உப்பு தேவைக்கேற்ப

புளி தண்ணீர்கால் கப்

தாளிக்க 

கடுகு - கால் டீஸ்பூன்

பெருங்காயம் - 1 சிட்டிகை

எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :


  கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் வெங்காயம், வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.


  வெங்காயம் கலர் மாறி, வெண்டைக்காயும் பாதி வெந்ததும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.


  தக்காளி வெந்து எண்ணெய் பிரியும் போது, தூள் வகை எல்லாம் சேர்த்து தேவைக்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.


  தூளின் வாசம் போய், காய் வெந்ததும், புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு எடுக்கவும்.


இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : வெறும் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.