பருப்பு ரசம் செய்வது எப்படி .!
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு வெந்த நீர் - 3 கோப்பை
மிளகாய் வற்றல் - 3
புளி - 30 கிராம்
தக்காளி - 2
வெங்காயம் - 6
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்
மிளகு - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை ::::
புளியை அரை டம்ளர் நீரில் கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றுங்கள்....
பருப்பு வெந்த நீரையும் அதில் ஊற்றி உப்பைப் போட்டுக் கலக்கிக் கொள்ளுங்கள்....
மிளகாய் வற்றல், பூண்டு, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை அம்மியில் வைத்து விழுதாக அரைத்து அதையும் அந்தப் பாத்திரத்தில் போடுங்கள்....
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கச் செய்துவிட்டு வெங்காயத்தை நறுக்கிப் போட்டுக் கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு வதக்குங்கள்....
வெங்காயம் வதங்கியதும் தயாரித்து வைத்திருக்கும் ரசக் கலவையை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள்....
கருத்துகள் இல்லை