காளான் சுக்கா செய்வது எப்படி...??


தேவையான பொருட்கள்:


காளான் – 250 கிராம் 

சீரகம் – 1/2 டீஸ்பூன் 

வெந்தயம் – 1/4 டீஸ்பூன் 

மிளகு – ஒரு டீஸ்பூன் 

தனியா – 1 1/2 டீஸ்பூன்

 பட்டை – 2 

காய்ந்த மிளகாய் – 8

 எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் 

கடுகு – ஒரு டீஸ்பூன் 

கருவேப்பிலை – ஒரு கொத்து 

பூண்டு இடித்தது – 1 1/2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2 

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு 

புளி கரைத்தது – 2 டேபிள் ஸ்பூன் 


செய்முறை::::


 முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சீரகம், வெந்தயம், மிளகு, தனியா பட்டை, காய்ந்த மிளகாய் ஆறு இவற்றைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.


 இவை அனைத்தும் வறுபட்ட பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்து வைத்துள்ள காளானை நறுக்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். 


இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். 


எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட வேண்டும். கடுகு வெடித்ததும் இடித்த பூண்டை அதில் சேர்த்து பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.


 பிறகு நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து வெங்காயம் நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். 


 வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கலந்த பிறகு இதில் 50எம்எல் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விட வேண்டும்.


 காளான் நன்றாக வெந்த பிறகு இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு கெட்டியாக கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீர் இவற்றை ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். 


ஐந்து நிமிடம் இது நன்றாக வெந்த பிறகு நாம் மறைத்து வைத்திருக்கும் பொடியை இதன் மேல் தூவி ஒருமுறை நன்றாக கலந்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் அசைவ சுவையில் அருமையான காளான் சுக்கா தயாராகிவிட்டது...



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.