இராணுவத்தால் சுட்டுப் படுகொலையான நிலாவின் நினைவேந்தல்!


இராணுவ ஊரடங்கு வேளையில் வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நிலாவின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.


ஊடகவியலாளர், நண்பன் சகாதேவன் நிலக்சனின் 17ஆண்டுகளுக்கு முன் 01.08.2007 அன்று இராணுவ ஊரடங்கு அமுலில் இருந்த வேளையில் அதிகாலை அவனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.


ஆயுததாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டபோது நிலக்சன் யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் ஊடக கற்கை மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்ததோடு சாரளம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றிவந்தார். நிலக்சன் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.


சகாதேவன் நிலக்சன் கொழும்பில் இருவார கால ஊடகப் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் மறுநாள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி  அவரது வீட்டிற்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வீட்டுக்கு வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்தனர்.


இன்று அதிகாலை 5.10 மணிக்கு நிலக்சன் அது வீட்டில்  சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.