தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி கிளை திறந்துவைப்பு!


தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி கிளை தேர்தல் அலுவலகம் இன்று (28) ஓட்டமாவடி பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.


ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவரும் அகில் அவசர சேவைப் பிரிவின் பணிப்பாளருமான நியாஸ் ஹாஜியார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


மட்டக்களப்பு தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைத்தியர் எம்.பி.எம்.அஜிவத், இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கிறிசன் பீரீஸ், NIO. பொறியியல் குழுவின் உறுப்பினர் ஜனித்த கொடித்துவக்கு உட்பட தென்பகுதி மற்றும் கல்குடா பிரதேச தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


இதேவேளை தேர்தல் அலவலகம் திறப்பதற்கு முன்பதாக தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் எதிர்கால அரசியல் நோக்கம் உள்ளடங்கியதான 'நாடு அநுரவோடு'  என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரங்கள் ஓட்டமாவடி வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டு மக்களை தெளிவுபடுத்தும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றன.


இவ் நடவடிக்கையில் தென் பகுதி மற்றும் கல்குடா தொகுதியை உள்ளடக்கியதான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து செயற்பட்டனர்.


அத்துடன் நாளைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்கா ஓட்டமாவடி பிரதேசத்திற்கு வருகை தரவுள்ளதால் அவரை வரவேற்கும் முகமான மக்கள் சந்திப்பு ஏற்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.