வடக்குமாகாண ஆளுநர் - யாழ்ப்பாணம் முஸ்லிம் பிரதிநிதிகள் விசேட சந்திப்பு!
ஜனாதிபதி செயலகத்தின் முஸ்லிம் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோருக்குமிடையே விசேட கலந்துரையாடல் ஒன்றில் நேற்று (29) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
மேற்படி சந்திப்பில் யாழ் அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநரை, ஜனாதிபதி செயலகத்தின் முஸ்லிம் விவகார பணிப்பாளர் உயர்திரு ஏ.எம்.கசன் அவர்களுடன் இணைந்து சந்தித்ததுடன், யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம் மக்களின் சமூகப் பொதுத் தேவைகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் 07 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தான் அவதானம் செலுத்துவதாகவும், விரைந்து உரிய திணைக்களங்களுக்கு ஊடாக அதனை செயற்படுத்துவதாகவும் ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.
இச் சந்திப்பில் யாழ் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணம் அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் சார்பில் ஜனாப்.எம்.ஏ.சி.முபீன், ஏ.எச்.ஜமால் மொஹிதீன், மொளலவி எம்.ஏ.பைசர் மதனி, எச்.சினாஸ், எம்.ஏ.சி.ஜாஹித், பி.எம்.எம்.சரபுல் அனாம், ஆரிப் மற்றும் என்.எம்.அப்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இச் சந்திப்பிற்கான முழுமையான ஏற்பாட்டை ஜனாதிபதி செயலக முஸ்லிம் விவகாரப் பணிப்பாளர் அவர்களுடன் இணைந்து மௌலவி எம்.ஏ.பைசர் மதனி அவர்கள் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிட்டத்தக்கதாகும்.
குறிப்பு :- மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
கருத்துகள் இல்லை