மட்டன் குருமா!!
நெய் சோறு , சப்பாத்தி பரோட்டா எல்லாத்துக்கும் நாங்க செய்யுறது இந்த மட்டன் குருமா தான் ஒரு தடவை நீங்க செய்து பாருங்கள்
ஒரு மிக்ஸி ஜாரில் ஒர் பட்டை , கிராம்பு , ஏலக்காய் , 4 சில்லு தேங்காய் ,
5 முந்திரி ,
2 ஸ்பூன் பொட்டுக்கடலை ,
2 ஸ்பூன் மல்லித்தூள் ,
5 ஸ்பூன் தயிர்
சேர்த்து நல்ல பேஸ்ட் போல் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்
ஒரு குக்கரில் எண்ணெய் , நெய் சேர்த்து ஓர் பட்டை , கிராம்பு , ஏலக்காய் சேர்த்து கூடவே பொடியா நறுக்கிய 2 வெங்காயம் நல்லா வதங்கின பிறகு
அரைகிலோ மட்டன் சேர்த்து நல்லா வதக்கவும்
கூடவே 2 ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் ,
2 பச்சைமிளகாய் ,
1 ஸ்பூன் மிளகாய்த்தூள் ,
ஒரு கைப்பிடி புதினா ,
உப்பு ,
அரைத்து வைத்த மசாலா சேர்த்து 5 நிமிடம் கிண்டவேண்டும்
2 டம்பளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் வேகவைக்க வேண்டும்
விருப்பம் இருந்தால் வேகவைத்த உருளைக்கிழங்கு கடைசில் சேர்த்து இறக்கினால் கம கம மட்டன் குருமா ரெடி
#tipsoftheday #muttonrecipes #fbpost #cookwithsajee #tipsandtricks #fbreelsvideo #postoftheday
கருத்துகள் இல்லை