மன்னாரில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி!📸

இன்றைய தினம் காலை மன்னார் நீதிமன்றுக்கு முன்னால்  துப்பாக்கிச்சூடு இடம்பெற்றன. இதில் இருவர் பலியானார்கள். பொலிசாரின் ஆதரவோடு இச்சம்பவம் இடம்பெற்றதாக மக்கள் விமசனம் தெரிவித்துள்ளனர். இந்த jvp அரசாங்க காலத்துல இடம்பெற்ற திட்டமிட்ட படுகொலையாக கருதப்படுகின்றது.

இரண்டாம் இனைப்பு

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்

காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

உந்துருளியில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.