அத்தியாவசிய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு!!
நாட்டின் மருத்துவமனை அமைப்பில் அத்தியாவசிய தடுப்பூசிகளின் இருப்பு தீர்ந்துவிட்டதாக வைத்தியர் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜி.ஜி சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இதனால் நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், மயக்கமடைந்த பின்னர் சுயநினைவை மீட்டெடுக்கும் நியோஸ்டிக்மைன் தடுப்பூசி மருந்து அனேகமான வைத்தியசாலைகளுக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், மயக்க நிலையடைய பயன்படுத்தப்படும் லிக்னோகைன் தடுப்பூசி மற்றும் மஞ்சள் காமாலையை தடுக்க நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
அவசர இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை