ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!
ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்ற காலை வெளியிட்டு வைக்கப்பட்டது.
‘ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்’எண்ணக்கருவில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
‘ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்’ என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டை திவாலான நிலையில் இருந்து மீட்பதற்கான பொருளாதார மறுசீரமமைப்பு தொடர்பான அடிப்படை நடைமுறைகள் இடம்பெற்றுள்ளன.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவது ‘ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்’ கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.
இன்றைய நிகழ்வில் மதத் தலைவர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை