ஸ்பெயின் கிரிக்கெட் அணி உலக சாதனை!

 


ரி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற புதிய உலக சாதனையை ஸ்பெயின் கிரிக்கெட் அணி படைத்துள்ளது.


2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.சி.சி. ரி20 உலகக்கிண்ண தொடருக்கான ஐரோப்பிய பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஸ்பெயின் கிரிக்கெட் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் (ஒரு போட்டி முடிவு இல்லை) புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் கிரீஸை வென்றதன் மூலம் ஸ்பெயின் தொடர்ந்து 14 ரி20 வெற்றிகளை நிறைவு செய்து உலக சாதனை படைத்துள்ளது.


இதற்கு முன் மலேசியா மற்றும் பெர்முடா அணிகள் தொடர்ச்சியாக 13 வெற்றிகளையும், இந்தியா, ஆப்கனிஸ்தான் மற்றும் ருமேனியா அணிகள் 12 வெற்றிகளையும் பெற்றிருந்தன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.