கத்திரிக்காய் கூட்டு செய்வது எப்படி..!!
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கத்தரிக்காய் கால் கிலோ
பாசிப்பருப்பு அரை கப்
உளுத்தம்பருப்பு 3 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
கடுகு கால் டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
நெய் அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 5
கறிவேப்பிலை ஒரு கொத்து
செய்முறை :
தேங்காய், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். அதில் நறுக்கிய கத்தரிக்காய், உப்பை சேர்க்கவும்.
காய் வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்தால் கத்திரிக்காய் கூட்டு ரெடி!.
பொங்கல் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை கூடுதலாக இருக்கும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், தோசை, பொங்கல் சாதம்.
கருத்துகள் இல்லை