ஊவா வெள்ளஸ்ஸ வனப்பகுதியில் பாரிய அளவில் காட்டுத்தீ
ஊவா வெள்ளஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு மேற்பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாரிய அளவில் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வனப்பகுதியில் இதுவரையில் சுமார் 2 ஏக்கர் பகுதி தீயினால் எரிந்து நாசமாடைந்துள்ளதாகவும் தீயை அணைப்பதற்காக 30 பேரைக் கொண்ட 112 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் அவ்விடத்திற்கு சென்றுள்ளதாகவும் இராணுவத்தினருடன் பொதுமக்களும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இருப்பினும் தற்போது நிலவும் கடுமையான காற்றின் காரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் சிரமமாக காணப்படுகின்றது.
கருத்துகள் இல்லை