ரணில் அனுப்பிய கடிதம்?
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பிரிவு ஒன்றை உருவாக்குமாறு கோரி ரணில் அந்த கடிதத்தினை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.அதன்படி, அந்த கடிதத்தில் ரணில் கோரிய பாதுகாவலர்களின் எண்ணிக்கை 163 ஆகும்.
இதேவேளை, 15 சமையல்காரர்கள், 6 மருத்துவ அதிகாரிகள், ஒரு கணினி மற்றும் பிரிண்டர் ஆகியவையும் கோரப்பட்டுள்ளன.முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை அகற்றுவதாக தற்போதைய ஜனாதிபதி உறுதியளித்துள்ள சூழலில், ரணில் இந்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை