வண்டி (One D) யால வந்த வினை!
கொஞ்ச நாளைக்குதான் ஒரு பள்ளிகூடத்தில படிக்கிறது. அடுத்தநாள் இடம்பெயர்ந்து இன்னொரு பள்ளிகூடத்தில படிப்பு . சுற்றுலாக்கு போனமாதிரித்தான் சுத்தி சுத்தி ஒவ்வொரு பள்ளிக்கூடம் போறது. எல்லாம் கொஞ்ச கொஞ்ச நாட்கள் என்றால் படிப்பு எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
இப்பிடி யுத்த காலத்துக்க ஓடி ஓடிப் படிச்சு ஒருமாதிரி ஓயல் பரீட்சையும் எடுத்தாச்சு . பெறுபெறு வந்த நேரம் இப்ப போல phone, internet வசதிகள் அப்ப எங்களுக்கு இருக்கேல. பள்ளிகூடம் போய்தான் பெறுபேறு பாக்கவேணும்.. பெறுபேறு வந்தநேரம் ஆவலா நானும் நண்பியும் பள்ளிகூடத்தில பாத்திட்டு படிச்ச தனியார் கல்விநிலையத்துக்கு போனோம். அங்க ஆங்கிலபாட வாத்தியார்தான் வாசலில வண்டிய தள்ளிக்கொண்டு நிண்டவர். அப்பவே எங்களுக்கு விளங்கிட்டுது ஆங்கிலத்துக்கு என்ன றிசல்ட் எண்டு கேக்கபோறார் எண்டு. எங்களைக் கண்டதும் முதல் நண்பியைத்தான் கேட்டார்
.' உமக்கு என்ன றிசல்ட் ? எண்டு. அவள் சொல்லமுதல் நான் வாயை வைச்சுகொண்டு இருக்கேலாம ஆங்கிலத்தோட சேர்த்து ஏன் எங்கட தமிழை விடுவான் எண்டு நினைச்சு இரண்டையும் கலந்தடிச்சு
7C ,D யை 'ஏழிஞ்சி வண்டி ' எண்டன். அவள் சிரிச்சதும், உடன
"ஐஞ்சிஞ்சி அடிச்சதுபோல" அவருக்கு முகம்சிவந்து தன்ர வண்டிய நக்கலடிக்கிறன் எண்டு நினைச்சு, கோவம் பத்திக்கொண்டு வந்திட்டுது .
'உப்பிடி கிரந்தம் விட்டா எங்க படிப்பு ஏறும்' என்று எனக்கு நல்ல பேச்சு.
Sir க்கும் வண்டி என்றதாலையும், தேர்விலும் one D வந்ததாலையும்
பெருங் குற்றமாப்போச்சு. அதுக்குபிறகு என்ர றிசல்ஸ கேக்கவே இல்ல.
பிறேமா எழில்
29.09.2024
கருத்துகள் இல்லை