எனக்காக அழும் வானம்!
அழுதது போதும் என
எனக்காக அழும் வானம்.
மண்ணில் விழும்
மழைத்தூறல்களின் முத்தம்
உனக்காக என்கிறது.
கூடவே என்தலை
கோதிவிடும் காற்று.
குளிரும் போது
காய்வதற்காய் மூட்டிய நெருப்பின்
வெப்பம் உனக்காக என்கிறது.
விழும் போது
ஏந்திக் கொண்ட பூமி
சொல்கிறது-நீ
எத்தனை முறை
விழுந்தாலும் தாங்கிப் பிடிக்க
நான் இருக்கிறேன் என்று!
யாரும் இங்கு
தனிமையில்லை என்பதை
இயற்கை உணர்த்துகிறது.
இதையுணரா மனமோ
குழிபறித்தவர்களை எண்ணி
விழிவழியச் செய்கிறது.
கவிதாயினி ஆரையூர் தாமரை
கருத்துகள் இல்லை