சனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்-பொ.கஜேந்திரகுமார்!🎦
சனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். - கஜேந்திரகுமார் பொன்னம்பபலம் வேண்டுகோள்.
கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் நாடு திரும்பியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தியிருந்தார். கொழும்பு இராணி வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
❗இறுதிப் போர் மற்றும் இன அழிப்புக்கு பின்னர் தமிழ் தேசியவாதத்தை முற்று முழுதாக தோற்கடித்து விடலாம் , தமிழ் தேசிய வாதத்தை தமிழ் மக்களே படிப்படியாக கைவிட்டு விடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் சிங்கள தேசம் இயங்குகின்றது.
❗இலங்கை சிங்கள பௌத்த நாடு இங்கே தமிழ் தேசம் என்பதற்கு இடமேயில்லை என்பதனை தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ள கூடிய சூழலை உருவாக்கலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் சிங்கள தேசியவாதம் இயங்குகின்றது. இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றது
🚫தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் சிங்கள தேசியயவாதத்தை நிராகரிப்பதாக தமிழ் மக்கள் வெளிப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பம் ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு .
🚫அதாவது தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவத்தை பாதிக்காத வகையில் , தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை வலியுறுத்த கூடிய ஒரு சந்தர்ப்பம் ஜனாதிபதி தேர்தல்.
❗தமிழ் பொது வேட்பாளர் என்பதற்கு பின்னால் உள்ளவர்கள்
1️⃣நேற்றுவரை 13ம் திருத்தத்தை முற்று முழுதாக ஏற்றுக் கொண்டவர்கள்
2️⃣ரணில் விக்கிரம சிங்க வின் ஆட்சி சிறந்தது என புகழ்ந்தவர்களும் , ரணிலுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருபவர்களும்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெற்றி பெறுவதை இந்தியாவும் மேற்குலகமும் விரும்பியுள்ளன.
அதே நேரம் தமிழ் மக்களுடைய வாக்குகள் இனி ரணிலுக்கு விழாது என்பதையும் இம்முறை அவர்கள் தேர்தலில் அக்கறை செலுத்தாமல் விடுவதற்கே வாய்ப்பு அதிகம் என்பதனையும் அத்தரப்புகள் புரிந்து கொண்டுள்ளன.
தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தால் அது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு அங்கீகாரமாக அமைந்துவிடும் அதே நேரம் ரணில் விக்கிரம சிங்க வின் வெற்றி வாய்ப்பை சவாலாக்கும் மற்றைய வேட்பாளர்களுக்கு தமிழ் மக்களின் வாக்குகள் சென்றுவிடவும் கூடாது என்பதற்காக உருவாக்கப் பட்டது தான் தமிழ் பொது வேட்பாளர்.
இன்னொரு பக்கம் தமிழரசு கட்சியின் ஒரு அணி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. அந்த தரப்பு கடந்த 15 வருடங்களாக சமஷ்டி என்ற சொல்லையே உச்சரிக்க தயாரில்லாத தரப்பு. எங்களுக்கு சமஷ்டி என்ற லேபிள் தேவையில்லை என கூறிய தரப்பு.
ஆனால் அவர்கள் இப்போது சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து கொண்டு திடீரென சமஷ்டி என்றும் தமிழ் தேசம் என்றும் உச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். மறுபுறம் அனுரவை புகழ்ந்தும் வருகின்றனர்.
உண்மையில் இவர்கள் என்ன செய்கின்றார்கள் என அவதானித்தால் சிங்கள மக்கள் மத்தியில் சஜித் பிரேமதாசவுடன் தமிழ் தேசியவாதிகள் உள்ளனர் என காட்டி தமிழ் தேசிய வாதிகளுடன் கூட்டு வைத்தவர் எப்படி சிங்கள தேசிய வாதத்துக்கு உண்மையாக இருப்பார் என்ற குழப்பத்தை ஏற்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் சஜித்துக்கு செல்ல கூடிய வாக்குகளை ரணில் நோக்கி திசை திருப்பும் உத்தியையே கடைப்பிடிக்கின்றனர்.
ஆகவே தமிழ் மக்கள் இவை அனைத்தையும் தொகுத்து பார்த்து உண்மைகளை புரிந்து கொண்டு போலி கோஷங்களுக்கு ஏமாறாமல், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை ஒற்றுமையாக புறக்கணிக்க வேண்டும்.
(16.09.24)ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
கருத்துகள் இல்லை