தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்! 📸
ஜநா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 16.09.2024 இன்று பி.ப 2:15 மணியளவில் ,சுவிஸ் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
தமிழர்களுக்கெதிரான தாங்கொணா அடக்குமுறைகள் ,இன்னல்களினால் பிறப்பெடுத்த தமிழீழப் விடுதலைப் போராட்டம் பல்லாயிரம் மாவீரர்களினதும் தமிழ் மக்களினதும் தியாகத்தினால் உயர்நிலைக்குச் சென்று, 2009 இல் நடந்த திட்டமிட்ட இனவழிப்புப் போருக்குப் பின்னும் அறவழிப்போராட்டமாக தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, தமிழின அழிப்பிற்கு எதிராக,உணர்வெழுச்சியுடன் அனைத்துல நீதி வேண்டி விடுதலை நோக்கி வீறுகொண்டு அறவழியில் இப்போராட்டம் நடைபெறுகின்றது
தமிழர்கள் இவ்வாறான தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்களை முன்னெடுப்பதனூடாக,எமது விடுதலையை தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், எமது தமிழீழ மண்ணை மீட்டு ,சுதந்திரமாக வாழ முடியும்.இச்சூழமைவில் காலத்தின் தேவை அறிந்து நாம் செயலாற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை