சர்வதேசத்திற்குச் செய்தி சொல்ல மக்கள் என்ன தலையாட்டிப்பொம்மைகளா ?
"சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம்" என்ற தமிழரசுக்கட்சியின் யதார்த்தமான , சாத்தியப்பாடுகள் உள்ள ,
முற்போக்கான நியாயமான ஓர் முடிவைக்கூட , இல்லை இல்லை இது ரணிலை மறைமுகமாக ஆதரிக்கின்ற
சுமந்திரனின் நிலைப்பாடு என , முழுப்பூசணிக்காயை சோற்றுக்கோப்பைக்குள் புதைத்தாலும் நம்பக்கூடியளவு , சுமந்திரன் வெறுப்பில் கண்மூடித்திரிபவர்கள் இந்த தமிழ்மக்கள் , என்று இன்னமும் நம்பிக்கொண்டு கதைகட்டுகின்றார்கள் சிலர் .
நான் கூட கடந்த பாராளுமன்றத்தேர்தலில் போலித்தமிழ்த்தேசியவாதிகளின் பின்னால் கண் முழித்துப்பார்க்காமல்
சென்ற ஒருத்தி தான் . கண் முழிக்காமல் இருந்திருந்தால் இன்று கூட பொதுவேட்பாளர் , தேர்தல் புறக்கணிப்பு என்ற வெற்றுக்கோசங்களின் பின்னால் , ஏமாந்து கொண்டே அலைந்திருப்பேனோ என்னவோ ,
சலுகைகளுக்காகவும் , பணத்திற்காகவும் மக்களை விலைகொடுக்கத் தயாராகவுள்ள ஒரு கூட்டத்திடம் , மக்களில் ஒருத்தியாக , விலைபோயிருந்திருக்கின்றேன், பாருங்களேன் . " போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்பவர் பின் போகுமளவு , தமிழ் உணர்வில் வீண் மயக்கம் கொண்டிருந்தேன் என்பதே சரியான உண்மை .
கழிவு விலைகளுடன் 70 % 50 % 40% 30% என விளம்பரங்களைப்பார்த்து , பொருட்களை நுகர்ந்து , பயனை அனுபவிக்க முதல் பொருள் காலாவதியாகி, பணம் விரயமாவதைப்போல , ஜனாதிபதித்தேர்தலில் , தமிழ்ப்பொது வேட்பாளர் " என்ற இறக்குமதி கூட காலாவதியான ஒரு பயனற்ற பொருள் தான் .
21 தேர்தல் , அன்றே இலங்கைக்கான புதிய ஜனாதிபதியும் தெரிவுசெய்யப்பட்டுவிடுவார் . ஆக
தேர்தலின் நோக்கமும் விளைவும் தெரிந்துகொண்டே சம்பந்தம் இல்லாமல் ;
சர்வதேசத்திற்குச் செய்தி சொல்ல மக்கள் என்ன தலையாட்டிப்பொம்மைகளா ?
தேர்தலைப்புறக்கணிக்க சிந்திக்கும் திறனற்றவர்களா ? ஒரு முறை சிந்தியுங்கள் ; தெளிவடையுங்கள் .
இன்றைய கள நிலவரங்கள் காட்டும் சுருக்கமான நிலைப்பாடு _#சுமந்திரன் வெறுப்பு '' மாத்திரமே .வேறெதுவும் கிடையாது.
" தமிழ் மக்கள் மீதும் புலம்பெயர் ஆதரவாளர்கள் மத்தியிலும் வேணுமென்றே திட்டமிட்டு பொய் வதந்திகள் , பிரச்சாரங்களை பரப்பி சுமந்திரன்_வெறுப்பை உண்டுபண்ணி , தம்மை தூய தமிழ்த்தேசியவாதிகளாக முன்னிறுத்தி , பணத்தால் தம் வாழ்வையும் , தம் அதிகாரத்தையும் ,தொழில்வாண்மைகளையும் முன்னேற்றத்துடிக்கும் பினாமிகளையும் , அவர்கள் சேவகர்களையும் ஆராய்ந்துபாருங்கள் .
எல்லாம் போலி , நச்சுப்பயிர்கள் குவிந்து நிற்கும் காணியில் நல்ல மரங்கள் தான், நச்சுமரங்களால் மறைந்துபோகின்றன போலும் ;
கடந்த பாராளுமன்றத்தேர்தல் , வாக்கெண்ணல் நிலைய நிலைமை ; நினைவுபடுத்திப்பாருங்கள் ;
இதை ஏன் இப்போது ஞாபகப்படுத்துகின்றேன் என்றால்.....
நானும் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் சுமந்திரனின் வாக்கு குறைந்திருக்கின்றது , மக்கள் பாடம் புகட்டியிருக்கின்றார்கள் என , கொஞ்சம் பெரிதாகவே , ஏதோ சொல்லிச்சிரித்துக் கொள்ளுமளவு சுமந்திரன் வெறுப்பு கொண்ட ஒருத்தி தான் நானும் ;
அப்போது , கொரோணா பெருந்தொற்றுக்காலம் ; எங்களுடைய அலுவலகத்தில் , தற்காலிக இணைப்பில் வந்திருந்த ஓர் அக்கா ; என்னை கிட்ட அழைத்தார் .
"சுரகோ நீங்க ஒன்பதாம் நம்பர் தானே .. " ஏன் சுமந்திரன் மேல் இத்தனை வெறுப்பு . முகப்புத்தகங்களையும் , தமிழ்த்தேசியப்பத்திரிகைகளையும் , வெட்டப்பட்ட துண்டு துணுக்கு வீடியோக்களைப் பகிர்ந்தும் சுமந்திரன் மீது போலித்தமிழ்த்தேசியச்சமூகம்
கொட்டும் வதந்திகளை நம்பக்கூடிய ஒருவர் தானா நீங்கள்.....? "
எனக்கு என்னமோ ஒரு மாதிரி ஆக ;
அவரே தொடர்ந்தார் ,
"உங்களை இந்த அலுவலகத்தில் வந்த நாள் முதல் கவனித்து வருகின்றேன் ; அதனால் இதை சொல்ல முடியும் என நம்புகிறேன் என்றவாறு .....
"சுமந்திரன் சேரின் பெண் வடிவமாக உங்களைப்பார்த்துக்கொள்கின்றேன் " இங்கு கடமையாற்றும் அலுவலக ஊழியர்கள் மீது எத்தனை கரிசனையோடு நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதும் , பொதுமக்கள் வரும் போது எத்தகைய தூய சேவையை வழங்க வேண்டும் என்றும் நீங்கள் பேராசைப்பட்டாலும் , அலுவலக உயரதிகாரிகள் சரி , சக ஊழியர்கள் சரி உங்களை , யார் பக்கத்திற்கு உரியவர்கள் என்பதை கண்டுகொள்ளாமல் , உங்களைப்போய்க் குறைகூறிக்கொண்டு , என்னமோ எல்லாம் செய்துகொள்கின்றார்கள் .
ஆனாலும் நீங்கள் அலுவலக முறைமையை சிறப்பாகவும் , மக்கள் சேவையை நேர்மையாகவும் பேண விரும்புவதும் ;
அதற்காகப்போராடுவதும் ;
நான் கண்டுகொண்டது /
அது போலத்தான் , சுமந்திரன் சேரின் நிலைமை ; தென்னிலங்கையிலும் அவரைக் கண்டே அஞ்சுகின்றனர் ; எதிரியாக நோக்குகின்றார்கள் ;
எப்படியெனில் ;
தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை இவர் போராட்டம் , பேரம்பேசல் , பாராளுமன்றக்குரல்கள், நகர்வுகள் சாத்தியப்படுத்தக்கூடும் என ;
மாறாக தமிழ் மக்கள் மூலம் தத்தம் ஆசைகளை நிறைவேற்றக்காத்திருக்கும் போலித்தேசியவாதிகள் , இன உணர்வால் மாத்திரம் மக்களை ஏமாளிகளாகவே வைத்திருக்கலாம் என நம்புவர்கள் ,
"சுமந்திரன் தென்னிலங்கையில் சமரசம் செய்கின்றார், நல்லிணக்கம் பேசுகின்றார் " என்ற இனவாதத்தொனிகளால் , மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்புகின்றார்கள் . படங்கள் , உரையாடல்களை தமக்குச்சாதகமாக வியாக்கியானப்படுத்தி , மக்கள் மூளைகளை உணர்வால் மூடச்செய்கின்றனர் . பாவப்பட்ட இந்த மக்களின் சிந்திக்கும் கால அவகாசத்தையே இன உணர்வால் தடுக்கின்றனர் .
இப்படியாக இரண்டு நிலையிலும் , எங்கும் சாய முடியாமல் , அங்கும் வளையாமல் , இங்கும் நெளியாமல் , எங்கேயுமே நிமிர்ந்து நிற்கின்ற அந்த தில் இருக்கே , அது தான் சுமந்திரன் .
அது ஒன்பதாம் நம்பர்களிடம் இயல்பாக இருக்கும் போல , என்பதை உங்களைப்பார்த்து நினைத்து முடிக்கல ; நீங்க ......என இழுத்தார் .
மேலும் சொன்னார் , படித்த , பல உயர்பதவிகளில் உள்ள , அரசியல் நாகரிமான பலர் சுமந்திரனுக்கே தங்கள் வாக்குகளை அளிப்பவர்கள் ; அவருக்கென வாக்கு வட்டாரம் ஒன்று பெரியளவில் எப்போதுமே இருந்துகொண்டிருக்கின்றது .கட்டாயம் இருக்கும் . பல தமிழர்கள் தமது உரிமைகளை அனுபவித்து பல பதவிகளில்
திராணியோடு இருக்க அவரது உதவி சட்ட வடிலிலும் , பலவேறு வடிவிலும் இருக்கின்றது , என்று முடித்துக்கொண்டார் .
ஆதலால் நீங்கள் சில்லறைத்தனமாக அவரை எடைபோட்டு உங்களைத் தரம்
தாழ்த்திக்கொள்ளவேண்டாம் என்பது போலவே இருந்தது அவரது உரையாடல் .
அதன் பிறகு தாமதமே இல்லை ; சிறுகச்சிறுக , அவர் செயற்பாடுகள், இயங்குநிலைகள் , பேச்சுக்கள், உரையாடல்கள் , ஓய்வில்லாத அரசியல் பயணங்கள் , நேர்மையான அணுகுமுறைகள்
ஒவ்வொன்றையும் ஆற அமர மூளையால் உள்வாங்கத்தொடங்கினேன் .....
அந்த நேரம் சட்டத்துறை முதல் வருட மாணவியாக , இலங்கை அரசிலயமைப்புச்சட்டத்தையும் படித்துக்கொள்கின்றேன் ;
தமிழ்த்தேசியம் என்கின்ற பெயரால் , தமிழன் உணர்வுகளைச் சுரண்டிப்பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் ;
மக்கள் மனங்களை உளுத்துப்போகச்செய்ய முடியுமே தவிர, எந்த உணர்வுப்போக்கும் , பொங்குதலும் வேலைக்கு ஆகாது என்பதைப்புரிந்துகொண்டேன் . அரசியலமைப்பு மீயுயர் சட்டமாக உள்ள நாட்டில் , சட்டவாட்சியை நிலைநிறுத்துவதே காலத்தின் தேவை என்பதையும் புரிந்துகெண்டேன் .
ஆக, தமிழர்கள் ;
சுதந்திரம் , சுயநிர்ணயம் , உரிமை என்பவற்றுக்காக கொடுத்த அத்தனை விலைகளையும் , எதற்கும் உதவாது பெறுமதியற்றதாக்கி ; போலித்தமிழ்த்தேசியவாதிகளை , வாழ வைக்கின்ற போலிச்செயற்பாட்டாளர்களுக்கு "சுமந்திரன்" என்பதை எதிர்க்க பேராயுதமும் , பெரும் படையும் தேவைப்படுகின்றது என்பதே கள ஆய்வு ;
ஓரணியில் மக்களைத்திரட்டி , சர்வதேசத்திற்குச் செய்தி சொல்வதாக நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த பொதுவேட்பாளர் என்ற மாயமான் , தமிழ் இனத்தின் சாபம் ,துரோகம் ,துயரம் .....
இன்னும் சொல்வதானால் , தமிழ்த்தேசிய அரங்கில் சுமந்திரனை வெளியேற்றலாம் என்ற பகற்கனவு
சூரிய இயக்கம் இல்லையென்றால் பகல் எங்கே ? இரவு எங்கே ?
கனவுகளும் எங்கே ; ஆம் சுமந்திரன் இல்லையென்றால் தமிழ்த்தேசிய போராட்டமே விலைபோய்விடும் .........
நிலைமை அந்தளவு மோசமாகி விட்டது ;
ஆதலால் அன்பான பொதுமக்களே ; யாருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று குழம்பிக்கொண்டிருக்கும் உங்கள் ஏக்கம் , தயக்கத்திற்கு இன்றே விடைகொடுங்கள்;
கண்ணை மூடிக்கொண்டே , சஜித் பிரேமதாசாவிற்கு ஒரு புள்ளடி இடுங்கள் ; உங்கள் அபிலாசைகள் , கனவுகள் , சுய கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமைகள் , அனைத்தும் கிடைக்கச்செய்யும் வகையில் , சுமந்திரன் இயக்கம் தொடர்ச்சியாக உழைக்கக்காத்திருக்கின்றது !!!!
ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் உரிமைகளை வென்றெடுக்கக் கிட்டத்தெரியும் , அந்தப்பாதையைத் தெரிவுசெய்வோம் .
சுமந்திரம் எனும் குரலைப்பலப்படுத்துவோம் .
சகலரும் இந்த நாட்டில் , சரிநிகர் சமானமாக வாழ்வோம்
சகலருக்கும் வெற்றி
கருத்துகள் இல்லை