யாழ் தீவகத்தில் பிரசார பணிகள்,தீவிரம்.!

 எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில்(21/09/2024) தமிழ் பொது வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,உயர்திரு பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து,பிரசார பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் ஊர்காவற்துறை,தொகுதியில் உள்ளடங்கும் ஊர்களை சொந்த இடமாகக்கொண்ட,தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினரிடம்,உள்ளூர் மற்றும் புலம்பெயர்,உறவுகள் விடுத்த தொடர் கோரிக்கைகளுக்கு அமைய,யாழ்,தீவகம்,எழுவைதீவு,பருத்தியடைப்பு,மெலிஞ்சிமுனை,அனலைதீவு பயணிகள் படகுகள் போன்ற பகுதிகள் மற்றும் இடங்களில்,அந்தந்த ஊர் மக்களுடன் இணைந்து,இன்று குறித்த பகுதிகளில் உள்ள,குடி மனைகள் மற்றும் கடைத்தொகுதிகளில் தீவிர துண்டு பிரசார பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன,மேற்படி பிரசார பணிகளில்,தீவக தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் குழுமம்,
தீவக விருட்சம் அமைப்பு,தீவகக் கோட்டம்
போராளிகள் நலன் புரிச்சங்கம் எனப் பல அமைப்பினரும் இணைந்து செயல்படுகின்றனர்.பிரசார பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு ஊர் மக்கள் மாலைகள் அணிவித்து பொன்னாடை போர்த்தியும் கெளரவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.