மக்கள் என்பது வாக்குப் போடும் கருவி மட்டுமே.!

 


சிறீலங்கா போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பதென்பது மக்கள் அல்ல - மக்கள் என்பது வாக்குப் போடும் கருவி மட்டுமே.


இன்றைய உலக ஒழுங்கைக் கட்டியாளும் பிராந்திய, பூகோள - குறிப்பாக மேற்குலக சக்திகள்தான் இதன் பிரதான பின்புலம்.


அதிக தூரம் போக வேண்டாம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயவை ஆட்சி பீடத்தில் ஏற்ற 'ஈஸ்டர்' தாக்குதல் வரை இறங்கி வேலை செய்தது இந்த மேற்குலக லொபி. பின்பு அதே கோத்தபாயவை குறுக்கு வழியில் வெளியேற்ற 'காலி முகத்திடல்' களத்தையும் திறந்தது இதே மேற்குலகம்.


ஆனால் 2009 இற்கு முன்பு கிட்டத்தட்ட இரு தசாப்தங்களாக இதே பிராந்திய - மேற்குலக சக்திகள் தீவின் ஆட்சியாளரைத் தீர்மானிக்கும் லொபிக்கு முட்டுக்கட்டையாக ஒரு 'அதி மனிதர்' தீவில் வாழ்ந்தார். அவரது நகர்வுகள்தான் கொழும்பில் யார் ஆட்சி பீடம் ஏற வேண்டும் என்பதைத் தீர்மானித்தது. இதன் உச்ச பட்சமாக 2006 இல் ரணிலை ஆட்சியில் தக்க வைத்து தீவை மையப்படுத்திய இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் புவிசார் ஆட்டத்திற்கு தயாராயிருந்த மேற்குலகத்தின் - குறிப்பாக அமெரிக்காவின் கணக்கை அந்த அதி மனிதர் நிர்மூலமாக்கி மகிந்தவை ஆட்சி பீடம் ஏற்றும் ஆட்டத்தை ஆடினார். 


2009 தமிழின அழிப்பைப் பார்த்து விட்டு இது 'அவரின்' தவறான முடிவென்று விமர்சித்தவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு கொழும்பு திவாலாகிய போது 'அவரைத்' தீர்க்கதரிசி என்று புகழ்ந்தார்கள்.


அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கணிதம்தான் தீவில் சுத்திச் சுழலும். இதை நாம் 'நந்திக்கடல் கணிதம்' என்று வர்ணிக்கிறோம். 


யார் ஆட்சி பீடம் ஏறினாலும் இந்தக் கணக்கிலிருந்து தப்பவே முடியாது.


அதனால்தான் இன்றைய உலக பயங்கரவாத அரச ஒழுங்கைக் கட்டிக் காக்கும் வல்லரசுகள் அந்த 'மனிதர்' மீது இன்றளவும் கடுப்பில் இருக்கிறார்கள்.


இது எதுவும் புரியாமல் அல்லது புரிய விருப்பமில்லாமல் தமிழர் தரப்பு தமக்குள்ளாகவே பிராண்டிக் கொண்டிருப்பது பெரும் துயரம்.


எதிரிகளாலும் வெளிச் சக்திகளாலும் நந்திக்கடல் கணிதத்தை சரி செய்யவோ - கலைத்துப் போடவோ முடியாது. 


ஆனால் நமது தவறுகள் அந்தக் கணிதத்தை கலைக்க முடியாது - ஆனால் கால தாமதப் படுத்தலாம்.


அதைத்தான் நாம் அவ்வப்போது செய்து தொலைக்கிறோம்.


அதில் இந்தத் தேர்தல் கூத்துக்களும் சேர்ந்து கொள்கிறது.


ஆனாலும் நம்பிக்கையுடன் தொடர்கிறது விடுதலைப் பயணம். 🔥


வெல்வோம் - வென்றே தீருவோம் ❤️

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.