யாழ்.பெண் வைத்தியரின் மோசமான செயல்! தவிக்கும் நோயாளர்கள்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் கடந்த 6 நாட்களாக விடுதிக்கு வருகை தராமையினால் நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 2 நரம்பியல் வைத்திய நிபுணர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் வைத்திய நிபுணர் திருமதி. கவிதா மற்றும் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் ஆகியோர் கடமையாற்றுகின்றனர்.வைத்திய நிபுணர் திருமதி. கவிதா நாளாந்தம் வைத்தியசாலை விடுதிக்கு சென்று தனது நோயாளிகளை பார்வையிட்டு வருகின்றார்.இதேவேளை, வைத்திய நிபுணர் அஜந்தா சீராக வைத்தியசாலை விடுதிக்கு சென்று நேயாளர்களை பார்வையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வைத்திய நிபுணர் அஜந்தா கடந்த 18.09.2024 திகதி அன்று இறுதியாக வைத்தியசாலை விடுதிக்கு வந்து, மிகவும் குறுகிய நேரம் நோயாளிகளை பார்வையிட்டு சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதற்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை வரை (23.09.2024) வைத்தியசாலை விடுதிக்கு வந்து நோயாளிகளை பார்வையிடவில்லை என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த வைத்திய நிபுணர் அஜந்தாவின் கண்காணிப்பின் கீழ் உள்ள நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.ஆகையால் நோயாளிகள் நோயின் வீரியத்தால் மிகவும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
குறித்த வைத்திய நிபுணர் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் இயக்குனராக கடமையாற்றி வருகின்றார்.
இந்நிலையில் அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமை புரிய வேண்டிய நேரத்தில் தனது தனியார் மருத்துவமனையில் சேவை புரிகின்றாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.வைத்திய நிபுணர் அஜந்தா தமது தனியார் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு கட்டணம் அறவிட்ட பின்னர் அவர்களை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு வைத்து சிகிச்சை வழங்குவதாகவும், அவர்களுக்கு சிறப்பு கண்காணிப்பு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களது வரிப்பணத்தில் சம்பளத்தினை பெறுகின்ற அரச அதிகாரிகள் இவ்வாறு தமது சேவையை துஷ்பிரயோகம் செய்வது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.இந்த விடயங்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு தெரிந்து நடக்கின்றனவா? அல்லது தெரியாமல் நடக்கின்றனவா? என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறாமல், மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையுமாக உள்ளது.
கருத்துகள் இல்லை