டிரஸ் இல்லாம நடிக்கிறத பத்தி சொல்லவே இல்ல!



சமீபத்தில் சரவணன் இயக்கி சசிகுமார் நடித்து வெளியான திரைப்படம் நந்தன். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலமான சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் பாலாஜி சக்திவேல் சமுத்திரக்கனி போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார் .ஆர் வி சரண் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த படம் தலித் சமூகத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றியும் ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கிகளையும் ஆதரவையும் பெற்று பதவிக்கு வரும் தலித் தலைவர்கள் எவ்வாறு கை பொம்மையாக ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும் திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் படத்தின் இயக்குனரான சரவணன்.


இதில் மிகவும் மாடர்ன் பொண்ணான ஸ்ருதி பெரியசாமி இந்தப் படத்தில் அந்த கேரக்டராகவே மாறி இருப்பார். இதைப்பற்றி ஒரு பேட்டியில் கூறும்போது செல்வி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ருதி பெரியசாமி இந்த படத்தில் நடித்திருப்பார். அதனால் சுருதி செல்வியாக மாறியதுதான் மிகவும் கஷ்டம் எனக் கூறியிருந்தார். சாணியை எடுத்து அடிப்பதாகட்டும் சசிகுமார் சாரை ஆடை இல்லாமல் அடிக்க அவரை நான் காப்பாற்ற போகும் அந்த காட்சியாகட்டும் மிகவும் எமோஷனலாக இருந்தது. கிளிசரின் போடாமல் அந்த காட்சிகளில் எல்லாம் நான் நடித்திருப்பேன். அதுவும் ஒரு குறிப்பிட்ட சீனில் சசிகுமாரின் டிரெஸை கழட்டி அடித்து கொண்டிருப்பார்கள்.

அந்த நேரத்தில் நான் என்னுடைய முந்தானையை எடுத்து அவரை மூடுவது மாதிரியான ஒரு சீன் இருக்கும். முதலில் சசிகுமார் இப்படித்தான் இருப்பார் என என்னிடம் சொல்லவே இல்லை. பொதுவாக சசிகுமாரை நீங்கள் காப்பாற்றும் மாதிரியான காட்சி என கூறியிருந்தார்களே தவிர அவர் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இருப்பார் என என்னிடம் சொல்லவில்லை . அந்த காட்சிக்கு முந்தைய காட்சியில் ஏற்கனவே நான் எமோஷனலாகி அழுது கொண்டு நடித்திருப்பேன். அதனால் அந்த மூடிலே தான் நான் இருந்தேன். இந்த சீன் வரும் போது நான் உள்ளே வந்து பார்க்க சசிகுமார் ஆடை இல்லாமல் இருந்ததை பார்த்ததும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாகி விட்டது.

உண்மையிலேயே அவரைப் பார்த்து நான் அழுதுவிட்டேன். படத்தில் பார்க்கும் பொழுது அந்த சீனில் நான் அழுது கொண்டுதான் இருப்பேன். ஆனால் அது நான் உண்மையிலேயே அழுதது. கிளிசரின் கூட நான் போடவில்லை. மிகவும் ஒரு சவாலான கேரக்டர் என சுருதி பெரியசாமி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற சுருதி பெரியசாமி இந்த படத்திற்காக ஒரு கிராமத்திற்கு சென்று புடவை எப்படி கட்ட வேண்டும் வாசல் எப்படி தெளிக்க வேண்டும் எந்த மாதிரி பேச வேண்டும் என அந்த கிராமத்தில் ஒரு வாரம் தங்கி இருந்து அங்குள்ள மக்களிடம் பேசி பழகி அந்த கேரக்டருக்காக மிகவும் மெனக்கிட்டு இருப்பதாக அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் சுருதி பெரியசாமி.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.