புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு செய்வது எப்படி?


தேவையான பொருட்கள் :


பொருள் - அளவு

புடலங்காய்அரை கிலோ

கடலைப் பருப்பு 200 கிராம் 

மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப

அரைக்க

தேங்காய் துருவல் - 1 கப்

சீரகம் - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4 

தாளிக்க

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

பெருங்காயத் தூள் - அரை சிட்டிகை

செய்முறை :


  முதலில் புடலங்காயை உப்பு கொண்டு நன்கு தேய்த்து, நீரில் கழுவி, பின் அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 


   அதன்பின் குக்கரில் கடலைப் பருப்பை போட்டு, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.


  வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள புடலங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து, வேக வைக்க வேண்டும். அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, பின் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.


  பின்பு காயில் பச்சை வாசனை போனதும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களையும், உப்பும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் அனைத்தையும் தாளித்து கூட்டுடன் சேர்க்க வேண்டும்.


   இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சூடான சாதத்துடன் சாப்பிடலாம். 


 

sujisujiaarthi

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.