நடிகை பூஜாவின் திருமணம்!
சாய் பல்லவியின் தங்கையும் நடிகையுமான பூஜாவுக்கு நேற்று வியாழக்கிழமை படுகர் இன முறைப்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவருக்கு இந்த வருடம் ஜனவரி மாதம் வினீத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது.
பூஜா சித்திரை செவ்வானம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்துடன் தற்போது சமூக வலைத்தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கருத்துகள் இல்லை