அனுரவை ஆதரித்த ஒரேநபர் என்றால், அது மருத்துவர் அர்ச்சுனா மட்டுமே..!

 


இந்தத் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து அனுரவை ஆதரித்த ஒரேநபர் என்றால், அது மருத்துவர் அர்ச்சுனா மட்டுமே..! அதாவது மக்களால் அறியப்பட்ட ஒரு நபர் என்கிற அடிப்படையில்.! 


அரசியலுக்குள் இப்போதுதான் நுழைந்து, பலவித விமர்சனங்களை எல்லாம் எதிர்கொண்டு, கிண்டல், கேலி, நக்கல் அனைத்தையும் தாங்கிக்கொண்டு, அனுரவுக்காக உரத்துக் குரல் கொடுத்தவர் அவர். 


எனவே அவருக்குரிய உயர்ந்த கௌரவத்தை, அனுரவின் அரசு, அவருக்கு கொடுக்கவேண்டும் என்பது எனது விருப்பம். அவருக்கு கிடைக்கும் மதிப்பும் கௌரவமும்தான், தமிழ் மக்களிடையே அனுரமீதான நம்பிக்கையைத் தோற்றுவிக்கும்.! 


இந்தத் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளரை தீவிரமாக ஆதரித்த நானே கூறுகிறேன் - மருத்துவரை உயர்ந்த இடத்தில் வைத்து அனுர அரசு அழகுபார்க்க வேண்டும். 


அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். என ரஜிவன் ராமலிங்கம் தனது முகநூலில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.