சனாதிபதி அநுரவின் அதிரடி ஆரம்பம்!
வெளிநாடு செல்வதை தடுப்பதற்காக 30 பேரின் பெயர்ப்பட்டியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியையும் ,ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைத்து வரும் தேர்தலில் போட்டியிடவைத்து, பாராளுமன்ற பலத்தை அனுரவுக்கு வழங்காதிருக்க முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்ட்டு வருகிறது.
பாராளுமன்றக் கலைப்புக்குப் பின்னர் ஊழலுடன் தொடர்புபட்ட கைதுகள் அடுத்தடுத்து இடம்பெறலாம்?
அவ்வாறான செயற்பாடு இடம்பெற்றால் ஜனாதிபதித் தேர்தலை விட கூடுதல் ஆதரவை பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர தரப்பு பெற்றுவிடும்.
வரும் நாட்களில் படைத் தளபதிகளில் இருந்து நாட்டில் பல மாற்றங்கள் நிகழவுள்ளதாக கொழும்பு உயர்மட்டத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை