முட்டை விலையில் வீழ்ச்சி!


முட்டையொன்றின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.


முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.


உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவடைந்தமையே காரணம் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளதுடன் ஒரு முட்டையின் விலை 28 ரூபா தொடக்கம் 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.