தேர்தல் திகதியை மறுதலிக்கும் தேர்தல் ஆணையாளர்!!

 


பொதுத் தேர்தலை நடத்த அறிவிக்கப்பட்டுள்ள திகதி அரசமைப்புக்கு முரணானது என சமூக ஊடகங்களில் வெளிவரும் கருத்துக்களைத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க மறுத்துள்ளார்.

"பொதுத் தேர்தலை நடத்த எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஏற்ற திகதி அல்ல.

தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் ஐந்து வார கால இடைவெளி இருக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதற்குத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.

"பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 4 – 11 வரை ஆகும்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆரம்பிக்கும் திகதி உட்பட 5 வார இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகின்றது.

இந்நிலையில், தேர்தலுக்கு நவம்பர் 14 ஆம் திகதி சரியானது. அல்ல என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.