பிரித்தானியா அரசிடம்இழப்பீடு கோரும் நைஜீரியா!
நையீரியாவின் டெல்ட்டா பகுதியில் அதிகளவான எண்ணைக் கழிவுகளை வள மான நிலத்தில் சிந்தியதால் சூழலுக்கு ஏற்பட்ட இழப்புக்காக பிரித்தானியா அரசிடம் 310 மில் லியன் டொலர்களை அல் லது 505 பில்லியன் நைராவை நையீரியா வின் சமூகம் கோரியுள்ளது.
பிரித்தானியாவின் செல் நிறுவனம் இந்த சுற்றாடலை மாசுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் குற் றம் சுமத்தப்பட்டுள்ளது. லஜே சமுதாயத்தை சேர்ந்த 1200 பேர் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள் ளனர்.பிரித்தானியாவின் செல் நிறுவனம் நீதி மன்றத்தால் விதிக் கப்பட்ட நிபந்தனைகளை மீறி நையீரியாவில் உள்ள தனது சொத்துக்களை விற்பனை செய்வதற்கு முற்பட்டுள்ளது. ஆபிரிக்கா வில் உள்ள தனது 2.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்களை விற்பனை செய்த வற்கு செல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தது.
சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக் களுக்கான இழப்பீடுகளை வழங்காது செல் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு நையீரியா அரசு அனுமதிகளை வழங்கக் கூடாது என அனைத்துலக மன்னிப்புச்சபை உட்பட பல மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கைவிடுத்துள்ளன.
80 வருடங்களுக்கு மேலாக நையீரியாவின் பிரித்தானியாவின் நிறுவனம் எண்ணை அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வந்திருந்தது. 1937 ஆம் ஆண்டு தொடக்கம் பிரித்தானியா நிறுவனம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் இந்த பிராந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு வந்துள்ளது.
மீனவர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட 13,000 பேருக்கு பிரித்தானியாவின் செல் நிறு வனம் இழப்பீடு வழங்கவேண்டும் என பிரித் தானியாவின் நீதிமன்றமும் கடந்த வருடம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
கருத்துகள் இல்லை