இஸ்ரேல் செல்லும் இந்திய பணியாளர்கள்!
இஸ்ரேலுக்கும் – இந்தியாவுக்கும் இடையில் கடந்த வருடம் மே மாதம் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இஸ் ரேலுக்கு 42,000 இந்தியர்களை பணிக்கு அனுப்புவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.
கட்டிட நிர்மாணத்துறை மற்றும் தாதிகள் பணிகளுக்கு முதல் கட்டமாக 10,349 பேர் அனுப்பபட்டிருந்தனர். தற்போது மீண்டும் 10,000 பணியாளர்களை அனுப்புவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. உத்தரப்பிரதே சம், தெலுங்கானா மற்றும் ஹரி யானா ஆகிய மாநிலங்களில் இருந்து பணியாளர்கள் அனுப் பப்பட்டிருந்தனர் என கடந்த திங்கட்கிழமை(16) இந்திய ஊடகம் தெரிவித்திருந்தது.
இறப்பது ஒரு முறை தான் எனவே இஸ்ரேலுக்கு சென்று அதிக பணத்தை சம்பாதிக்க இந்தி யர்கள் விரும்புகின்றனர் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மாதம் ஒன்றிற்கு 150 தொடக்கம் 300 டொலர்களை சம்பாதிக்கும் பணியாளர்கள் இஸ்ரேலில் 1600 டொலர்களை சம்பாதிக்க முடியும்.
இந்தியர்களின் பணி தொடர்பில் தாம் மிகவும் திருப்த்தியடைந்துள்ளதாக இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் வழங்கும் ஊதியம் தொடர்பில் இந்திய பணியாளர்களும் திருப்த்தியடைந்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. இதனிடையே, 10 பில்லியன் டொலர்கள் பெறுமதியில் இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து மகாராட்சிரா மாநிலத்தில் மென்கடத்திகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை ஆரம் பிக்கவள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இஸ் ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் மற்றும் இஸ்ரேல் காசா பகுதி மீது மேற்கொண்டுவரும் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலில் பணியாற்றிய வெளிநாட்டு பணியாளர்கள் வெளி யேறியதால் இஸ்ரேலில் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை