ரணில் ஆதரவை தடுத்து நிறுத்திய பொலிஸார்!
முல்லைத்தீவில் நேற்றைய தினம் (06) மாலை இருளிலிருந்து நாட்டை ஒளியேற்றிய தலைவர் எனும் தொனிப் பொருளில் , ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக தீப்பந்தம் தாங்கி ஆதரவு தெரிவிக்கும் கவனயீர்ப்பு நடைபெற்றவிருந்தது.
இநிலையில் தேர்தல் அதிகாரி மற்றும் பொலிஸாரால் கவனயீர்ப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் பரப்புரை அலுவலகத்திற்கு முன்னாள் சுமார் 25 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்றுகூடியிருந்த வேளையில் முல்லைத்தீவு தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸாரால் கவனயீர்ப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையானது தேர்தல் விதிமுறைக்கு மீறிய செயலெனவும் அவ்வாறு கவனயீர்ப்பு மேற்கொள்ளப்படுமாயின் கைது செய்யப்படுவீர்கள் எனவும் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து கவனயீர்ப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தடுத்து நிறுத்தப்பட்ட கவனயீர்ப்பை தொடர்ந்து கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் பரப்புரை அலுவலகத்துக்கு முன்னால், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை