அவசியமானது!!

 


அனுமானங்கள் - இனி

     அவசியமில்லை!

******-************-******

அவர்,

இருக்கிறாரா? இல்லையா? எனும்

அனுமானிப்பு ஆராய்ச்சிகளை

அப்படியே விட்டுவிடுங்கள்...


அது ஒரு வசந்தகாலம்!,

மனிதம் வாழ்ந்த மகத்துவக் காலம்!

தேசநலனை மாத்திரமே

சிந்தித்து வாழ்ந்த சிறந்தகாலம்!.


அது இறைவர்களோடு மாத்திரம்

தொடர்புபட்ட சரித்திரச் சம்பவம்...

அதுஒரு பொற்கால வாழ்வின்

வரலாற்றுக் கதையம்சம்...


"இருந்தால் தலைவன்,

இல்லையேல் இறைவன்...!"

அந்தச் சிந்தையை நெஞ்சேந்திச்

செயலாற்றுதலைச் செப்பனிடுங்கள்...!


எம்மினத்தின் வழிகாட்டியாய் வாய்த்த

தேவமைந்தன் என்ற உண்மையை 

உணர்ந்து கொண்டவர்களாய்

வாழத் தலைப்பட்டாலே போதும்...


அவர் காட்டிவைத்த பாதைகளும்,

அன்றவர் நடந்துபோன சுவடுகளும்

உங்கள் வாழ்தலுக்கு வலுவாகுமென்ற

நம்பிக்கையோடு நாணயமாக நடவுங்கள்.


அந்த இறைமகனார் அன்று 

வகுத்துத்தந்த வழித்தடத்தை 

பற்றுதலாய்ப் பற்றிப்பிடித்துப்

பாழ்படுவோரைத் தடுப்பிடுங்கள்...


பாதைமாறிப் படுகுழியில்வீழும்

இளைய தலைமுறையை வழிப்படுத்த

பேதமையின்றிப் பெருமனதோடு

தலைப்பட்டுச் செயற்படுங்கள் போதும்!.


உங்கள் வம்சத்தின் காலம்

உங்களின் கைகளில் மாத்திரமே!

உங்களை மீறிய சக்தியாயிங்கே

எவர் வரினும் எதிர்த்து நில்லுங்கள்!.


                                      வன்னியூர்- வரன் 

                                            06/09/2024

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.