சனாதிபதிக்கு ஆதரவை வழங்கத் தயார்: சஜித் !
இலங்கையில் மிகவும் கடினமான சூழல் நிலவி வருவதாகவும் , தாயகத்தை மீள கட்டியெழுப்ப வெற்றி பெற்ற கட்சியால் மாத்திரம் செய்ய முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குறித்த நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படும் எந்தவொரு ஜனரஞ்சக மற்றும் ஜனநாயக செயற்பாட்டிற்கும் எந்தவொரு ஆதரவையும் வழங்க தயார் என சஜித் பிரேமதாச புதிய சனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வின் பின்னர் இராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை