வாக்கு கேட்பது சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே: அருட்தந்தை மா.சத்திவேல்!
மலையக கட்சி தலைவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பது, சுகபோகத்திற்கானதும் சுயநலத்திற்கானதுமே எனவும் மலைய மக்களை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மலையக தமிழர்கள், 200 வருட வரலாற்றை இந்நாட்டில் தமதாக்கி, தனித்துவ தேசிய இனமாக வளர்ந்து வருகின்றார்கள். இவர்களை அசிங்கப்படுத்தி அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. என அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை