அமரர் பொன். சிவபாலனின் 26ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!
யாழ்ப்பாணம் மாநகர சபை முன்னாள் முதல்வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளருமான அமரர் பொன். சிவபாலனின் 26 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு யாழ்ப்பாணம் சித்தங்கேணியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்றது. குடும்ப உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் திருவுருப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் த.முகுந்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி, யாழ். மாநகர சபையில் மாநகர போக்குவரத்து தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்ற வேளை கூரைமேல் வைக்கப்பட்ட கிளைமோர் தாக்குதலில் பொன். சிவபாலன் உயிரிழந்தார். அத்துடன் பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் 12 பேர் இந்தத் தாக்குதலில் உயரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை