திருகோணமலை மேலும் சிங்களமயமாக மாற்றப்படுகின்றன!
திருகோணமலை மாவட்டத் தில் நடைபெறும் காணி ஆக்கிரமிப்பின் காரணமாக தற்போது அம் மாவட்ட சனத்தொகையில் 27 சதவிகிதமானோர் சிங்கள மக்கள் என்றும் அம் மாவட்டத்தின் மொத்த நில விஸ்தீரணத்தில் 36 சதவி கிதத்தை அம் மக்கள் தம் கைவசம் வைத்துள்ளதாகவும் ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வடமாகாணத்தை யும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் திருகோணமலையின் குச்சவெளிப் பிரதேசம் கடந்த பத்து ஆண்டுகளில் மிக மோசமான மாற்றங்களைச் சந்தித்துள்ளது என் றும் அப்பிரதேசத்தின் 50 சதவீத நிலங்கள், அதாவது 41,164 ஏக்கர் காணிகள், பல அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் பௌத்த கோயில்களைக் கட்டுவதற்காகவும் அரசாங்க திணைக்களங்களால் கையேற்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்த மக்கள் விரட்டப்பட்டுள் ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு 3887 ஏக்கர் அபகரிக்கப்பட்ட காணிகளில் 26 பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள் ளதாகவும் விரட்டப்பட்ட மக்கள் தமது காணிகளுக்குப் போக முடியாதபடி இராணுவம் அங்கு நிலை கொண்டிருக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை